‘கொள்ளையர்கள் மீது நைஜீரிய படையின் தாக்குதல்’ இலக்கு தவறியதால் நைஜரில் சிறுவர்கள் பலி!
கொள்ளைக்காரர்களை" இலக்கு வைத்து நைஜீரிய இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் நைஜரின் ஏழு சிறுவர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஐந்து பேர் காயமடைந்தனர். நான்கு பேர் உடனடியாக கொல்லப்பட்டதாகவும், மூன்று பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்ததாகவும் அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
இதனையடுத்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நைஜீரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களே இந்த தாக்குதலின்போது கொல்லப்பட்டனர்
இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையைச் சுற்றியுள்ள பகுதிகளில் செயற்படும் "ஆயுதக் கொள்ளைக்காரர்களை" குறிவைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது
எனினும் அது இலக்கு தவறி கிராம குடியிருப்பை தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நைஜர் மற்றும் நைஜீரியா பிராந்தியத்தில் கடத்தல் மற்றும் கொலைகள் காரணமான ஆயுதமேந்திய குழுக்களுக்கு எதிராக கூட்டு இராணுவ நடவடிக்கைகளை நடத்தி வருகின்றன.
2018 முதல் நைஜர், ஆயுதக்குழுக்களின்; ஊடுருவலைத் தடுக்க நைஜீரியாவுடனான தனது எல்லையில் இராணுவ ரோந்துகளை வலுப்படுத்தியுள்ளது.
ஐந்து மற்றும் ஆறு வயதுடைய 26 சிறுவர்கள் மரடி நகரில் உள்ள பாடசாலையொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்த மூன்று மாதங்களுக்குப் பின்னரே தற்போதைய சம்பவம் நிகழ்ந்துள்ளது



