தமிழகத்தில் பனை மரங்களை வெட்ட தடை! தமிழக முதல்வர் அறிவிப்பு
தமிழ் நாட்டின் அரசு மரமான பனை மரத்தை வெட்டுவதற்கு முதலமைச்சரினால் தமிழக வேளாண் பட்ஜெட்டில் தடை அறிவிக்கப்பட்டமைக்கு சமதா கட்சி தமது வாழ்த்துக்களையும்,நன்றிகளையும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தமிழக முதலமைச்சர் மு.க .ஸ்டாலினுக்கு சமதா கட்சியின் தேசிய தலைமை பொதுச்செயலாளர் என்.ஏ.கோன் கடிதமொன்றினையும் அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பனை மரங்களை அழிவிலிருந்து தடுக்க தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைக்கு எமது வாழ்த்துக்களையும்,நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
பனை மரத்திலிருந்து கிடைக்கும் அனைத்து பொருட்களுக்கும் உலக சந்தையில் மிகுந்த வரவேற்பு உண்டு. இலங்கை அரசின் மொத்த வருமானத்தில் 10 விழுக்காடு பனை மரத்தின் மூலம் ஈட்டப்படுகின்றது.
இலங்கையில் பனை பாதுகாப்பு சபை PALMYRAH DEVELOPMENT BOARD என்றொரு அமைப்பு உள்ளது. அதற்கு அமைச்சரும் உண்டு.
இலங்கையிலிருந்து பனை பொருட்கள் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
தமிழ் நாடு அரசு பனை மரத்தின் முழு பயனையும் அரசின் வருவாயாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமதா கட்சி கேட்டுக்கொள்கின்றது என்றும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவுக்கரசி வீடியோவாக காட்டிய விஷயம், கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
சிங்கிள் பசங்க: மனம் விரும்புதே Round இல் எல்லை மீறிய போட்டியாளர்கள்! கொந்தளிக்கும் நெட்டிசன்கள் Manithan