இலங்கையின் நான்கு முன்னணி கட்டட ஒப்பந்ததாரர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்
இலங்கையின் நான்கு முன்னணி கட்டட ஒப்பந்ததாரர்களை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு, கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளதாக ஆங்கில செய்தித்தாள் ஒன்று கூறுகிறது.
இதன்படி இந்த நிறுவனங்கள், மூன்று ஆண்டுகள் முதல் ஆறு மாதங்கள் வரையிலான காலத்துக்கு, கேள்விப்பத்திர விடயங்களில் பங்கேற்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.
எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
மத்திய அதிவேக நெடுஞ்சாலை விடயத்தில் தவறான தகவல்களை சமர்ப்பித்த காரணத்துக்காகவே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, M/s Consulting Engineers & Contractors (Pvt) Ltd (மூன்று ஆண்டுகளுக்கும், M/s V.V. Kuranaratne & Company (ஒரு வருடம்), M/s u;OVAEL Construction (Pvt) Ltd (ஒரு வருடம்), மற்றும் W.K.K. Engineering Company (Pvt) Ltd (ஆறு மாதங்கள்) ஆகிய நிறுவனங்கள் கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam