நிறுத்தி வைக்கும் வைப்புத் தொகைகளுக்கான வரி வீதம் தொடர்பில் வங்கிகளின் அறிவிப்பு
2025ஆம் ஆண்டு ஏப்ரல் 1, முதல் வாடிக்கையாளர்களின் வைப்புத்தொகைகளில் இருந்து பெறப்படும் வட்டிக்கான நிறுத்தி வைக்கும் வரி 10வீதமாக அதிகரிக்கும் என்று வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்து வருகின்றன.
இந்த மாற்றம், நிறைவேற்றப்பட்டுள்ள, 2025ஆம் ஆண்டின் 02ஆம் எண் உள்நாட்டு வருமானச் சட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.
புதிய வரி நடவடிக்கை
அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வரி நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தற்போதைய 5வீத நிறுத்தி வைக்கும் வீதமாக இரட்டிப்பாக்கப்படும்.
திருத்தப்பட்ட வீதம், சேமிப்பு மற்றும் நிலையான வைப்புத்தொகைகளில் இருந்து பெறப்படும் வட்டி வருமானத்திற்கு பொருந்தும், அத்துடன் இது தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் இரண்டுக்கும் பொருந்தும்.
மொத்த வருமானமாக மாதத்திற்கு 150,000க்கும் குறைவாக சம்பாதிக்கும் வைப்புத்தொகையாளர்கள் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் மூலம் நிறுத்தி வைக்கும் வரி விலக்குகளைப் பெறலாம் என்று அரசாங்கம் கூறியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |