இரண்டு மாதங்களில் வங்குரோத்து நிலைமை நீங்கி விடும்-மனுஷ நாணயக்கார
நாட்டின் வங்குரோத்து நிலைமை இன்னும் இரண்டு மாதங்களில் முற்றாக நீங்கி விடும் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கரந்தெனிய பிரதேசத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் தொகுதி அதிகார சபை உருவாக்கப்படுவதை முன்னிட்டு இன்று நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ரணில் மட்டுமே முதுகெலும்புள்ள ஒரே தலைவர்
நாட்டில் முதுகெலும்பு பலமிக்க ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க மட்டுமே. நாடு அடைந்துள்ள வங்குரோத்து நிலைமையில் இருந்து நாட்டை மீட்க முதுகெலும்புள்ள ஒரே தலைவராக ரணில் விக்ரமசிங்க மாத்திரமே முன்வந்தார்.
ஏனையோர் முதுகெலும்பில்லாதவர்களை போல நடந்துக்கொண்டனர். நாடு அடைந்துள்ள வங்குரோத்து நிலைமையில் இருந்து நாடு படிப்படியாக மீண்டு வருகிறது.
இரண்டு மாதங்களில் இந்த நிலைமை முற்றாக நீங்கி விடும் எனவும் மனுஷ நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.