வங்கி கட்டமைப்புகள் சீர்குலையுமானால் நாடு பயங்கரமான அழிவுக்கு செல்லும்: வியாழேந்திரன் எடுத்துரைப்பு
வங்கி கட்டமைப்புகள் சீர்குலையுமானால் நாடு பயங்கரமான அழிவுக்கு செல்லும் எனவும், ஒரு நாடு வங்கி கட்டமைப்பை பாதுகாக்க தவறினால் அந்த நாட்டின் அழிவை யாராலும் தடுக்க முடியாது எனவும் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
கூட்டுறவு சபையின் கீழான வெல்த் கோப் வங்கியின் இரண்டாவது கிளை மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் திறந்துவைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
பொருளாதார சூழ்ச்சி
இதன்போது உரையாற்றிய இராஜாங்க அமைச்சர்,
“இன்று எமது நாட்டில் விவசாய உற்பத்தியின் மூலம் ஏழு தசம் ஐந்து சதவீதம் மாத்திரமே தற்போது இலாபமாக கிடைக்கின்றது. ஆனால் பெயர் விவசாய நாடு.
அரிசியினை பங்களாதேஸ், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்கின்ற நாடாக இலங்கை இருக்கின்றது.
இந்த நாட்டின் பொருளாதார சூழ்ச்சிக்கு ஏற்பட்டிருக்கின்ற மிகச் சிறந்த உதாரணம் இந்தியா இதைவிட எவ்வளவு பெரிய தாக்கத்திற்கு சென்றது.
நாட்டின் பண வீக்கம்
மூன்று வருடங்களில் கூட்டுறவு வலுப்படுத்தி விவசாய உற்பத்தியில் பெரிய புரட்சி ஏற்படுத்தி விட்டார்கள் இன்று இந்தியா பலமாக நிற்கின்றது.
நமது நாடு ஒரு சிறிய நாடு அழகான நாடு. அனைத்து வளங்களும் நிறைந்த நாடு. நாங்கள் உற்பத்தி பொருளாதாரத்தை அதிகரிக்கின்ற போது தான் இந்த நாட்டினுடைய பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாங்கள் படிப்படியாக மேலே கொண்டு வர முடியும்.
அதை விடுத்து இன்னமும் பேசிக்கொண்டு இருந்தால் பொருட்களின் விலை, இந்த நாட்டின் பண வீக்கம் இன்னமும் அதிகரிக்கத் தான் செய்யும்.
விவசாய உற்பத்தியை உற்பத்தி பொருளாதாரத்தை அதிகரிக்க வேண்டும் வெளிநாட்டு முதலீடுகளை உள்ளே கொண்டு வர வேண்டும் ஆனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வந்தால் இன்று துபாயில் விமான நிலையத்திலிருந்து இறங்கி ஒரு வெளிநாட்டவர் 24 மணித்தியாலத்தில் வியாபார பதிவினை செய்து அந்த அனுமதி பத்திரத்தை எடுக்கலாம்
ஆனால் இங்கு ஒரு வியாபார அனுமதி பெற்ற பெறுவதாயின் ஒன்றரை வருடங்கள் செல்கின்றது.” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |