வங்கி வைப்புகளுக்கு வட்டி வீதங்களை அதிகரிக்க நடவடிக்கை - ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை
இலங்கையில் வங்களில் நிலையான வைப்புக்களை வைத்துள்ள சிரேஷ்ட பிரஜைகளின் கணக்குகளுக்கு வட்டி வீதங்களை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டி வீதங்களை அதிகரிக்க நிதியமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
வட்டி வீதம்
தற்போது நிலையான வைப்புக்களுக்கான 8.5 வட்டி வீதம் வழங்கப்பட்டு வருகிறது. இதனை காரணமாக அதிகளவான சிரேஷ்ட பிரஜைகள் தமது நிலையான வைப்புக்களிலிருந்து பணத்தை மீற பெற்றுக்கொள்ளவதாக தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் 60 வயதிற்குட்பட சிரேஷ்ட பிரஜைகளால் நிலையான வைப்பிலிடப்படும் ஒரு மில்லியன் ரூபாவுக்கு பத்து வீத வட்டி வழங்கப்படவுள்ளது.
இரண்டு வருடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட வகையில் இந்த வட்டி வீதம் அதிகரிக்கப்படவுள்ளது.