வங்கிக் கடன் வட்டி வீதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்: இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு
உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் மொத்தக் கடன் வட்டி வீதத்தை 10 சதவீதமாகக் குறைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இருப்பினும், சில உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மொத்த கடன் வட்டி விகிதத்தை 9.92 சதவீதமாக பதிவு செய்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள பல வர்த்தக வங்கிகளின் கடன் வட்டி வீதங்கள் ஒற்றை இலக்கத்தை எட்டும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மூத்த பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதங்கள்
இதேவேளை முன்னதாக மூத்த பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதங்கள் தொடர்பில் தெளிவான பகுப்பாய்வை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) பணிப்புரை விடுத்திருந்தார்.

இது குறித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) சுட்டிக்காட்டியிருந்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri