வங்கி கடன் குறித்து அரசாங்கத்தின் புதிய தீர்மானம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கடனை வசூலிப்பது தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானம் வங்கித் துறையில் பெரும் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என இலங்கை வங்கிகள் சங்கம் (SLBA) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை வங்கிகள் சங்கம் (SLBA) அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.
தீர்மானம்
அந்த அறிக்கையில், பரேட் சட்டத்தின் ஊடாக கடனை வசூலிப்பதை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக தீர்மானம் எடுத்துள்ளது.

முழு வர்த்தக சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தாத ஒரு சில கடனை செலுத்தாதவர்களின் அழுத்தங்களுக்கு அமைய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் வங்கித் துறையில் பெரும் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
வங்கிகளுடன் கலந்துரையாடல்
இந்த விடயம் தொடர்பில் வங்கிகளுடன் எவ்வித கலந்துரையாடலும் மேற்கொள்ளப்படவில்லை.

அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தினால் அனைத்து வர்த்தகர்களுக்கும் கடன் பெறுவதற்கான செலவு அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் கடன் வசூல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கத்தின் தலையீடு ஒரு எச்சரிக்கையாகும் என இலங்கை மத்திய வங்கி (CBSL), உரிமம் பெற்ற அரச வங்கிகள், பட்டியலிடப்பட்ட தனியார் வங்கிகள் மற்றும் சர்வதேச வங்கிகளின் கிளை அலுவலகங்கள் ஆகியவற்றால் அனைத்து வங்கிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் என இலங்கை வங்கிகள் சங்கம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வீட்டுக்கு போனதும் 2 நாள் இதை தான் செய்தேன்! பிக்பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா Exclusive LIVE Manithan
ரஞ்சியில் அர்ஜுன் டெண்டுல்கர் 4 ஓட்டங்களில் அவுட்: 6 விக்கெட்டுகளை அள்ளிய வீரர்..சுருண்ட கோவா News Lankasri
ஆரம்பமாகும் குருபெயர்ச்சி... 48 நாட்களில் பொற்காலத்தை சந்திக்கும் ராசி யார் யார்னு தெரியுமா? Manithan