வங்கிகள் தொடர்பான சட்டமொன்றின் அதிகாரங்களை நீக்க நடவடிக்கை: சபையில் அறிவிப்பு
வங்கிகள் தங்கள் வைப்பாளர்களின் பணத்தைப் பாதுகாப்பதற்காக கடனாளிகளிடமிருந்து கடன்களை மீளப் பெறுவதற்கான சட்ட நடவடிக்கை சட்டத்தின் (Parate Law) அதிகாரங்களை தற்காலிகமாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இது தொடர்பில் எதிர்வரும் அமைச்சரவையில் பிரேரணை சமர்ப்பிக்கப்படும்.
பரேட் சட்ட அதிகாரங்கள்
இதன்படி குறிப்பிட்ட காலத்துக்கு பரேட் சட்டத்தின் அதிகாரங்களை மட்டுப்படுத்தும் யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நாட்டின் ஒவ்வொரு குழுவின் பிரச்சினைகளையும் தனித்தனியாக இனங்கண்டு அதற்கான பதில்களை காண தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |