விராட் கோலியின் சாதனையை முறியடித்த பாபர் அசாம்
பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் பாபர் அசாம், இன்று அரை சதம் கடந்துள்ளார்.
இதன் மூலம் அவர் ஒரே நாளில் இந்தியாவின் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரின் சாதனையை முறியடித்துள்ளார்.
பாபர் அசாம் இன்றைய போட்டியில் 40 பந்துகளை எதிர்கொண்டு 55 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

விராட் கோலியின் சாதனை
இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ஓட்டங்களை அதிவேகமாக அடித்த ஆசிய வீரர் என்ற விராட் கோலியின் சாதனை பாபர் அசாம் முறியடித்துள்ளார்.
விராட் கோலி இந்த மைல்கல்லை 261 போட்டிகளில் எட்டினார். ஆனால் பாபர் அசாம் தற்போது 251 போட்டிகளில் இந்த சாதனையை படைத்திருக்கின்றார். இதேபோன்று டி20 கிரிக்கெட்டில் பாபர் அசாம் பெற்ற 29 ஆவது அரை சதம் இதுவாகும்.

விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில்

இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக அரை சதம் அடித்தவர்கள் பட்டியலில் ரோகித் சர்மாவை பின்னுக்கு தள்ளி பாபர் அசாம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
ரோகித் சர்மா 28 அரை சதங்கள் அடித்திருக்கின்றார். இந்த பட்டியலில் விராட் கோலி 33 அரை சதம்
அடித்து தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கின்றார்.
பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பாய் சொல்லும் நடிகர் பிரபாஸ்- மனைவிக்காக என்ன செய்துள்ளார் பாருங்க... Cineulagam
மாபெரும் வெற்றியடைந்த கட்டா குஸ்தி 2... விஷ்ணு விஷாலுக்கு தயாரிப்பாளர் கொடுத்த பிரம்மாண்ட பரிசு Cineulagam
மிகப்பெரிய நபரை குளிப்பாட்டி, கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ஷோபனா... வீடியோ இதோ Cineulagam