பங்களாதேஷில் ஏற்பட்ட தீயில் 16 பேர் பலி
பபங்களாதேஷ் தலைநகர் டாக்காவின் மிர்பூர் பகுதியில் ஆடைத் தொழிற்சாலை மற்றும் அருகிலுள்ள இரசாயன கனஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 16 பேர் கொல்லப்பட்டதோடு பலர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என தீயணைப்பு சேவை இயக்குநர் தாஜுல் இஸ்லாம் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஆடைத் தொழிற்சாலையின் இரண்டாவது மற்றும் மூன்றாவது தளங்களில் இருந்து பதினாறு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என அவர் கூறியுள்ளார்.
கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட தீ
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதலில் தலைநகர் டாக்காவின் மிர்பூர் பகுதியில் உள்ள நான்கு மாடி தொழிற்சாலையின் மூன்றாவது மாடியில் நண்பகலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அதன் பின்னர், ப்ளீச்சிங் பவுடர், பிளாஸ்டிக் மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு சேமித்து வைக்கப்பட்டிருந்த ஒரு இரசாயனக் களஞ்சியத்திற்கும் பரவியுள்ளது என்று தீயணைப்புத் துறை அதிகாரி தல்ஹா பின் ஜாஷிம் கூறியுள்ளார்.
தீயணைப்பு வீரர்கள் கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்குப் பிறகு தொழிற்சாலை தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் களஞ்சியம் இன்னும் எரிந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





காஜல் அகர்வாலுக்கு என்னாச்சு.. போட்டோ பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்! ஆனால் உண்மை இதுதான் Cineulagam

பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan

உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
