பங்களாதேஷில் பயங்கரம்: படகில் ஏற முயன்றபோது ஆற்றில் விழுந்த பேருந்து - 24 பயணிகள் பலி
பங்களாதேஷின் தென்மேற்குப் பகுதியில் உள்ள பரிசால் (Barisal) மாவட்டத்தில், படகில் (Ferry) ஏற முயன்றபோது பேருந்து ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
பயணிகளுடன் வந்து கொண்டிருந்த அந்தப் பேருந்து, கீர்த்தன்கோலா (Kirtonkhola) ஆற்றைக் கடப்பதற்காகப் படகில் ஏற முற்பட்டபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் பாய்ந்தது.
மீட்புப் பணி
விபத்து நடந்த சமயத்தில் பேருந்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாகத் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் மற்றும் உள்ளூர் கடற்றொழிலாளகள் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை 24 சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆற்று நீரோட்டம் அதிகமாக இருப்பதாலும், பேருந்து முழுமையாக நீரில் மூழ்கியதாலும் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பலியானோரின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படும் நிலையில், இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆசியக் கடற்பரப்பில் ஈரான் நடத்திய தாக்குதல்கள்: இலங்கை உட்பட நூற்றுக்கணக்கான தெற்காசிய மாலுமிகள் பலி
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri