அத்தியாவசியப் பொருட்கள் குறித்து வெளியான தகவல்!
கொழும்பு துறைமுகத்தில் அத்தியாவசியப் பொருட்களை கொண்ட சுமார் 1500 கொள்கலன்கள் தேங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் கடந்த வெள்ளிக்கிழமையன்று இந்த கொள்கலன்களை துறைமுகத்தில் இருந்து வெளியில் கொண்டு வருவதற்காக டொலர்களை பெற்றுத்தருவதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன உறுதியளித்தபோதும், அது இடம்பெறவில்லை என்று இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்தே சுமார் 1500 கொள்கலன்கள் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
எனினும் இறக்குமதியாளர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காமை காரணமாகவே உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் உட்பட்ட அத்தியாவசியப் பொருட்களை துறைமுகத்தில் இருந்து விடுவிக்கவில்லை என்று சுங்கத்துறை தலைவர் ஜீ.வி ரவிப்பிரிய தெரிவித்துள்ளார்.