பண்டாரவளை மாநகரசபை மேயரின் முன்மாதிரியான செயல்
பண்டாரவளை மாநகரசபை மேயர் ஜனக நிஷாந்த ரத்நாயக்க பதவிக்காலம் நிறைவடைய முன்னரே உத்தியோகபூர்வ வாகனங்களைக் கையளித்துள்ளார்.
இலங்கையில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நாளை (19.03.2023) நள்ளிரவுடன் முடிவடையவுள்ளது.
இந்நிலையில் நாளைய தினம் விடுமுறை தினம் என்பதால் பண்டாரவளை மாநகர மேயர் நிஷாந்த ரத்நாயக் நேற்றைய தினமே தனது பதவிக்கான வசதிகளை கையளித்துள்ளார்.
ஆசியாவின் மிக இளம் வயது மேயர்
ஆசியாவின் மிக இளம் வயது மேயராக தெரிவாகியிருந்த நிஷாந்த ரத்நாயக்க தனது பதவிக்காலத்தில் பண்டாரவளை நகரின் உட்கட்டமைப்பு மற்றும் சுற்றுலாத்தலங்களை அபிவிருத்தி செய்வதில் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளார்.
இந்நிலையில் நேற்றைய தினம் நகரசபையின் ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், தனது உத்தியோகபூர்வ வாகனம் உள்ளிட்ட வசதிகளை நகர ஆணையாளரிடம் கையளித்துவிட்டு மேயர் பதவிக்கான சலுகைகளை கைவிட்டுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 1 நாள் முன்

உக்ரைனில் இறங்கிய பிரித்தானியாவின் சேலஞ்சர் 2 டாங்கிகள்! புடின் எச்சரிக்கையை மீறிய நடவடிக்கைகள் News Lankasri

மைனர் வேட்டி கட்டி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட இலங்கை குயின்! கமண்ட்டுகளை அள்ளி குவிக்கும் காட்சி Manithan
