பண்டாரவன்னியன் முல்லைத்தீவு கோட்டையினை கைப்பற்றிய வெற்றி நினைவு விழா
பண்டாரவன்னியன் ஆங்கிலேயரிடமிருந்து முல்லைத்தீவு கோட்டையினை கைப்பற்றிய 221ஆவது ஆண்டு வெற்றி நினைவு விழா முல்லைத்தீவில் கொண்டாடப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு, நேற்றையதினம் (25.08.2024) முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் கற்சிலைமடு கிராமத்தில் அமைந்துள்ள பண்டாரவன்னியன் சிலையடியில் ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய அதிபர் சின்னப்பா நாகேந்திரராசா தலைமையில் சிறப்புற நடைபெற்றுள்ளது.
பண்டாரவன்னியன் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி பவனியுடன் பிரதம விருந்தினர்கள், சிறப்பு விருந்தினர்களுடன் கற்சிலை மடு பண்டாரவன்னியன் வளாக முன்றலில் இருந்து சிலை அமைந்துள்ள வளாகத்திற்கு அழைத்துவரப்பட்டு விழா ஏற்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது.
மலர்தூவி வணக்கம்
பண்டாரவன்னியன் சிலைக்கு மலர்மாலை அணிவித்து வணக்கம் செலுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து உருவப்படத்திற்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலர்தூவி வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக முல்லைத்தீவு சுகாதார சேவைகள் பணிப்பாளரான செல்வராசா மதுரகன், சிறப்பு விருந்தினராக திட்டமிடல் வைத்திய அதிகாரி கைலாயநாதன் சுதர்சன், முல்லைத்தீவு மாவட்ட மூத்த கலைஞர் பெரியதம்பி செல்லக்குட்டி ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |