கட்டுநாயக்க விமான நிலைய இரண்டாவது முனைய விஸ்தரப்புக்கான திட்டம் இடைநிறுத்தம்
ஜெய்க்கா என்ற ஜப்பானிய சர்வதேச கூட்டுத்தாபன நிதியுதவியுடன், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை விரிவாக்கும் திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலை காரணமாகவே இந்த திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நிர்மாணத்தில் ஈடுபட்டுள்ள தாய்சேய் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி விமான நிலையத்தின் இரண்டாவது முனைய விரிவாக்கல் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டிருந்த 570 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியே இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு
இலங்கை, தமது கடன் மறுசீரமைப்பு செயல்முறையை முடிவுறுத்தும் வரை இந்த நிதியை இடைநிறுத்த நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாக ஜெய்க்கா அறிவித்துள்ளது.
இலங்கை. தாம் பெற்ற அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் திருப்பிச் செலுத்துவதை கடந்த ஏப்ரலில் இடைநிறுத்துவதாக அறிவித்தது.
இலங்கையில் நிலவும் சூழ்நிலை, எரிபொருள் மற்றும் ஏனைய பொருட்கள் கிடைக்காத காரணத்தினால், இந்த திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
தொழிலாளர்களின் பணி ஒப்பந்தம் இரத்து
எனவே இந்த திட்டத்தின் தொழிலாளர்களின் பணி ஒப்பந்தத்தையும் இரத்து செய்ய தாய்சேய் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்த முனையத்தின் கட்டுமானம் பணிகள் 2024 இல் நிறைவடையும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்த முனையம் செயற்படும்போது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஆண்டுக்கு 15 மில்லியன் பயணிகளை கையாளும் திறனைப் பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கொழும்புக்கு வந்த பின் செய்யப்போவது என்ன..! கோட்டாபய வகுத்துள்ள இரகசிய வியூகம் - அரசியல் ஆய்வாளர் தகவல் |