திருமணத்திற்கு தயாரான இளம் யுவதியின் விபரீத முடிவு - தானசாலையால் ஏற்பட்ட குழப்பம்
களுத்துறை, ஹொரணயில் தனது காதலன் தன்னை விடுத்து தனியாக வெசாக் தானசாலைக்கு சென்றதால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சல் காரணமாக, யுவதி ஒருவர் தனது உயிரை மாய்த்துள்ளார்.
மீவனபாலான பகுதியில் வசித்து வந்த ஷானிகா செவ்வந்தி என்ற 25 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளதுடன், விரைவில் திருமண வாழ்க்கையில் இணைய தயாராகி வந்துள்ளனர்.
யுவதியின் விபரீத முடிவு
கடந்த முதலாம் திகதி ஷானிகா, ரனால நவகமுவ பகுதியில் உள்ள தனது காதலனின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அப்பகுதியில் நடைபெற்ற தானசாலைக்கு செல்வதற்காக காதலனை அழைத்துள்ளார். எனினும் அவர் தனது காதலியை தவிர்த்து விட்டு தனியாகச் சென்றுள்ளார்.
தன்னை விட தானசாலையே முக்கியமாகி விட்டது என்ற உணர்வில் ஏற்பட்ட கடுமையான கோபத்தில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
ஆபத்தான நிலையில்
அன்று இரவு 7 மணியளவில் ஆபத்தான நிலையில் நவகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

“அம்மா... நான் அவரைப் பயமுறுத்த வேண்டும் என்பதற்காகவே இதைச் செய்தேன், இறக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல..” என அவர் வைத்தியசாலைக் கட்டிலில் இருந்து கண்ணீர் மல்கக் கூறியுள்ளார்.
எனினும் அவரை காப்பாற்ற முடியாமல் போயுள்ளதாக தாயார் கூறியுள்ளார்.