தேசியவீரன் பண்டாரவன்னியன் ஞாபகார்த்த முல்லைத்தீவு மாவட்ட சதுரங்க போட்டி
முல்லைத்தீவு மாவட்டச் செயலகம், முல்லைத்தீவு மாவட்ட , கல்விக்கும் அபிவிருத்திக்குமான நம்பிக்கை நிதியம் முல்லைத்தீவு மாவட்ட சதுரங்க சங்கம் ஆகியவை இணைந்து முல்லைத்தீவு மாவட்டப் பாடசாலை மாணவர்களின் ஆளுமைத் திறனை வெளிக்கொணரும் வகையிலும் சதுரங்க திறமையை அடையாளம் கண்டு ஊக்குவிக்கும் நோக்கிலும் தேசியவீரன் பண்டாரவன்னியனின் ஞாபகார்த்த முல்லைத்தீவு மாவட்ட சதுரங்க போட்டி இவ்வாண்டு முதல் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதற்தடவையாக தேசியவீரன் பண்டாரவன்னியன் ஞாபகார்த்த முல்லைத்தீவு மாவட்ட இவ்ஆண்டுக்கான சதுரங்க போட்டி நேற்றும் இன்றும் ( 16,17) முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் இடம்பெறுகின்றது.
நேற்று மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரனின் தலைமையில் ஆரம்பமாகிய தொடக்க நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் பிரதம அதிதியாகவும், வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன் சிறப்பு அதிதியாகவும் கலந்து போட்டியை ஆரம்பித்து வைத்தனர்.
இவ்வாரம்ப நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட சதுரங்க சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி தனஞ்சயன் மற்றும் போட்டி இணைப்பாளர் பொறியியலாளர் சுஜாந்தன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.








நல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம் & பட்டித்திருவிழா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan

டிரம்ப் தோற்கவில்லை.,ஆனால் இது புடினின் தெளிவான வெற்றி…! அமெரிக்க அதிகாரிகளின் சர்ச்சை கருத்து News Lankasri
