கிளிநொச்சி மாவட்டத்தில் வாழைக்குலை விலையில் வீழ்ச்சி
கிளிநொச்சி மாவட்டத்தில் வாழைக்குலை விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக செய்கையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
ஒரு கிலோ கதலி வாழைக்காய் 15ரூபா தொடக்கம் 20ரூபாவுக்கு கொள்வனவு இடம்பெறுவதால் தமது உற்பத்தி செலவுக்கேற்ப விற்பனை செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும் குருவிகளும், குரங்குகளுமே அவற்றை சாப்பிடுவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், பாரிய நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக வாழைச்செய்கையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
விலையில் வீழ்ச்சி
சந்தையில் கொடுப்பதற்கு கொண்டு செல்வதற்கான செலவே விற்பனை செய்கின்ற வாழைக்குலையில் கிடைக்காத நிலையில் மரத்துடனே அப்படியே விட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
வெளிமாவட்ட வியாபாரிகளும் கொள்வனவுக்கு வருவதில்லை என வாழைச்செய்கையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri
