பங்களாதேஷிடம் படுதோல்வியடைந்த இலங்கை
பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது ரி20 போட்டியில் இலங்கை அணி படுதோல்வியடைந்துள்ளது.
தம்புள்ள சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ரி20 போட்டியில் இலங்கை அணியை 83 ஓட்டங்களினால் வீழ்த்தி பங்களாதேஷ் வெற்றியீட்டியுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி களமிறங்கிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில 7 விக்கட்டுகளை இழந்து 177 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இதில் அணித் தலைவர் லின்டன் தாஸ் 76 ஓட்டங்களையும், ஷாமிம் ஹுசைன் 48 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்து வீச்சில் பினுர பெர்ணாண்டோ மூன்று விக்கட்டுகளை வீழ்த்தினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 15.2 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து வெறும் 94 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.
இலங்கை அணியின் சார்பில் பத்தும் நிசங்க 32 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
பந்து வீச்சில் பங்களாதேஷ் அணியின் சார்பில் ரிஸாட் ஹுசெய்ன் 18 ஓட்டங்களுக்கு மூன்று வீக்கட்டுகளை வீழ்த்தினார்.
போட்டியின் ஆட்ட நாயகனாக பங்களாதேஷ் அணித்தலைவர் லின்டன் தாஸ் தெரிவு செய்யப்பட்டார்.
மூன்று போட்டிகளைக் கொண்ட தொடரில் தலா ஓரு போட்டிகளிலும் இரு அணிகளும் வெற்றியீட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இறுதிப் போட்டியில் தொடரைக் கைப்பற்றும் அணி எது என்பதனை நிர்ணயிக்கும் போட்டியாக அமையும்.

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
