வாகன இறக்குமதிக்கு இரண்டு வருடங்களுக்கு தடை! அரசாங்கம் அறிவிப்பு
இரண்டு வருடங்களுக்கு வாகன இறக்குமதியை தடை செய்யும் வகையில் எட்டப்பட்ட தீர்மானத்தை, அவ்வாறே நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனை தெரிவித்துள்ளார். பொல்கஹவெலவில் உள்ள மைக்ரோ வாகன உற்பத்தி தொழிற்சாலையின் ஆய்வு சுற்றுப்பயணத்தின் பின்னர் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“உள்நாட்டில் வாகனங்களை உற்பத்தி செய்ய பல நிறுவனங்களை மீண்டும் ஊக்குவிக்க தற்போதைய அரசாங்கத்தால் முடிந்தது என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இரண்டு வருடங்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம்.
அது தொடர்ந்து அமுலில் இருக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். உள்நாட்டில் வாகன உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் தற்போதைய அரசாங்கம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
வாகனங்களின் சில உதிரிபாகங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவிக்கின்றார்.
எவ்வாறாயினும், சில உதிரிபாகங்கள் மாத்திரமே வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri
