சமபோஷ விற்பனைக்கு தடை விதித்து உத்தரவு..!
சமபோஷ என்ற வர்த்தக நாமத்தில் மேலதிக தானிய உணவுகளை விநியோகம் செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மொரவக்க நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் இந்த பொருட்களைக் கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
பரிசோதனையில் தெரியவந்த விடயம்
இந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அஃப்லாடோக்சின் அளவு அதிகமாக இருந்ததை வெளிப்படுத்தியதாக நீதிமன்றத்தில் அறிக்கையளிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த நிலையிலேயே, மொரவக்க பிரதேசத்துக்கு உட்பட்ட இப்பொருளின் விற்பனையை உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தடை செய்யுமாறும், தற்போது சந்தையில் உள்ள பொருட்களின் இருப்புகளை உடனடியாக அகற்றுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.