உயர் நீதிமன்றுக்கு நீதியரசர்களை நியமிக்க ஜனாதிபதிக்கு இடைக்கால தடை
உயர்நீதிமன்றத்துக்கு தலைமை நீதியரசரை தவிர மற்ற நீதியரசர்களை, ஜனாதிபதி மற்றும் அரசியலமைப்பு சபை ஆகியன நியமிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த இடைக்கால உத்தரவை இன்று(30.04.2024) உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவு அக்டோபர் 4ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என்று நீதியரசர்கள் குழாம் அறிவித்துள்ளது.
அடிப்படை உரிமை மனு
சட்டத்தரணி ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை ஏற்று உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தற்போதைய தலைவர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்னவை உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிப்பதற்கான ஜனாதிபதியின் பரிந்துரையை அரசியலமைப்புச் சபை அங்கீகரிக்குமாறு உத்தரவிட கோரி மனுதாரரான சட்டத்தரணி சரித் மஹீபுத்ர பத்திரத்ன இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
தமது மனுவில் அவர் பிரதமர் தினேஸ் குணவர்தன(Dinesh Gunawardena), சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன(Mahinda Yapa Abeywardena), எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa), நிமல் சிறிபால டி சில்வா(Nimal Siripala de Silva), சாகர காரியவசம்(Sagara Kariyawasam) உள்ளிட்ட அரசியலமைப்புச் சபை உறுப்பினர்களை பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு உயர்நீதிமன்ற நீதியரசர்களான எஸ்.துரைராஜா, ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் சிரான் குணரத்ன ஆகியோர் முன்னிலையில் விசாரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
You may like this