யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நிகழ்வினை நடாத்த தடையுத்தரவு
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதிக்கக் கோரி கோப்பாய் பொலிஸாரினால் முன்வைக்கப்பட விண்ணப்பத்துக்கு, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை (19) அனுமதியளித்துள்ள நிலையில் அவர்களுக்கான நீதிமன்ற தடையுத்தரவு இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர்,செயலாளர் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கும், பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கும் தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி நீதிமன்ற தடையுத்தரவில் நவம்பர் 21ம் திகதி தொடக்கம் நவம்பர் 28ம் திகதி வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் இறந்த நபர்களை நினைவு கூறுகின்ற மாவீரர் நாள் நிகழ்வினை தற்போது நாட்டில் காணப்படும் கொரோனாத் தொற்றுப் பரவலை கவனத்திற் கொண்டும், இந்நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட பொது இடத்தில்,பொது எண்ணத்துடன் பொதுமக்களை ஒன்று கூட்டியோ அல்லது தனிநபர் மூலமோ 15ம் இலக்க குற்றவியல் மாவீரர் நாள் நிகழ்வுகளை நடாத்துவதற்கு 1979ம் ஆண்டின் நடவடிமுறைச் சட்டக்கோவையின் பிரிவு 106(1) இன் கீழ் மன்றுக்குள்ள அதிகாரத்தின் பிரகாரம் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சூழலில் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படலாம் என்பதற்காக
பல்கலைக்கழக சூழலில் இராணுவத்தினரும், பொலிஸாரும் கண்காணிப்பு நடவடிக்கையில்
ஈடுபட்டு வருகின்றனர்.
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam