கொழும்பில் பிரபல பாடசாலை ஒன்றின் மாணவன் தற்கொலை - வெளியான காரணம்
கொழும்பில் பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்னர் தற்கொலை செய்துக் கொண்ட போதும் தற்போது அதற்கான காரணங்கள் வெளியாகி உள்ளது.
கொழும்பில் பிரபல பாடசாலையில் க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த மாணவனை ஆசிரியர் ஒருவர் மிகவும் தகாதமுறையில் திட்டி பிற மாணவர்கள் முன்னிலையில் அவமானத்திற்கு உட்படுதிய நிலையில் மனம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார்.
வகுப்புரீதியாக முதலாவதாகவும், ஆண்டுரீதியாக இரண்டாவதுநிலையிலும் பரீட்சையில் சித்தியடைந்த மாணவன், குறித்த சந்தர்ப்பத்தை தொடர்ந்து பாடசாலைக்கு செல்லமறுத்தது மாத்திரமின்றி தொடர்ச்சியாக அழுத்தவண்ணம் இருந்துள்ளார். அத்துடன் மிகவும் மனம் பாதிப்பட்டநிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
சிலகாலங்களுக்கு முன்னதாக இதே பாடசாலைக்கு நேரம் பிந்தி வந்த காரணத்தினால் பாடசாலை மைதானத்தில் நான்கு மணி நேரம் முழங்காலில் இருக்கும் படி ஆசிரியரால் தண்டிக்கப்பட்டு, அதனால் மனதளவிலும் உடல் அளவிலும் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அன்றைய நாளில் இருந்து மன அழுத்தத்திற்காக தொடர்ந்து மருந்து உட்கொள்ளும் நிலை ஏற்பட்டது எனவும்,இது பாடசாலை நிர்வாகம் அனைவருக்கும் நன்று தெரியும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் அவரின் தற்கொலை சம்பவம் பதிவாகி உள்ளது.
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri