இலங்கை வரும் போது விபத்துக்குள்ளான கப்பல் தொடர்பில் வெளியான தகவல்
அமெரிக்காவின் பெல்டிமோர் துறைமுகத்தில் இருந்து இலங்கை நோக்கி பயணித்த டாலி சரக்கு கப்பல் ஏற்கனவே பல விபத்துக்களை எதிர்கொண்ட கப்பல் என சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
2016 ஆம் ஆண்டில், பெல்ஜியத்தின் எண்ட்வெபர் துறைமுகத்திலிருந்து பிரேமாஹேவனுக்கு கப்பல் செல்லத் தொடங்கியபோது, அது துறைமுகத்தின் தளத்தின் மீது மோதி பல மீட்டர் பகுதியை சேதப்படுத்தியது.
ஏற்பட்டுள்ள மூன்று விபத்துக்கள்
இது தவிர, 2018 ஆம் ஆண்டில் இருந்து மேலும் மூன்று விபத்துக்கள் நடந்துள்ளதென வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவில் பாலத்தில் மோதியதில் கப்பலில் நிரம்பியிருந்த 13 கொள்கலன்கள் சேதமடைந்ததாகவும், அபாயகரமான பொருட்கள் இருந்த கொள்கலன் கடலுக்குள் விழுந்துள்ளதா எனவும் அமெரிக்க கடலோர காவல்படை குழு ஆராய தொடங்கியுள்ளது.
கடலில் விழுந்த கொள்கலன்களில் அபாயகரமான பொருட்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
இந்த விபத்தின் பின்னர் அந்த கப்பலில் இருந்து சுமார் 1.8 மில்லியன் கேலன் டீசல் தண்ணீரில் கசியும் அபாயம் உள்ளதாகவும், அந்த அபாயம் குறித்து கடலோர காவல்படை குழு கவனம் செலுத்தியுள்ளதாகவும் அமெரிக்கா தகவல் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |