முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய உறுப்பினரை நேரில் சென்று சந்தித்த கொழும்பு மேயர்
கொழும்பு மாநகர சபை பட்ஜெட் வாக்கெடுப்பில் ஆளும் தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு (NPP) ஆதரவாக வாக்களித்ததற்காக கட்சி உறுப்புரிமை இடைநீக்கம் செய்யப்பட்ட கொழும்பு நகர உறுப்பினர் சோஹாரா புகாரியை மேயர் ராய் கெலி பால்தாசர் சந்தித்துள்ளார்.
கலந்துரையாடிய விடயங்கள்
புகாரியின் வீட்டுக்கு தனது கட்சி உறுப்பினர்களுடன் சென்ற மேயர், அவரின் தற்போதைய நிலைமை தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டுள்ளார்.
சோஹாரா புகாரி நேற்று தனது சமூக வலைதளத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்:

"எனது நலம் குறித்து விசாரிக்க வீட்டிற்கு வந்த மேயர் மற்றும் நகராட்சி உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்."

கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயற்பட்டார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் சோஹாரா புகாரி கட்சியின் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 2 மணி நேரம் முன்
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri