தனது விருதை கோடீஸ்வரர் ஒருவருக்கு விற்ற கால்பந்தாட்ட ஜாம்பவான்: காரணம் இதுதான்!
போர்த்துக்கலைச் சேர்ந்த கால்பந்தாட்ட ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது ஐந்து பாலன் டி ஓர்களில் ஒன்றை இஸ்ரேலின் பெரும் பணக்கார் ஒருவருக்கு விற்றுள்ளார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ 2008, 2013, 2014, 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் பாலன் டி'ஓர் (Ballon d'Or) கோப்பைகளை வென்றுள்ளார்.
5 பாலன் டி'ஓர் கோப்பைகள்
இதற்கமைய தனது கால்பந்தாட்ட வாழ்க்கையில் 5 பாலன் டி'ஓர் (Ballon d'Or) கோப்பைகளை வென்றுள்ளார். ஆனால், அதில் 4 விருதுகள் மட்டுமே இப்போது அவரிடம் உள்ளது.
ஏனெனில் 2017-ல் தனது பலோன் டி'ஓர் கோப்பைகளில் ஒன்றை அவர் விற்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக, Ballon d'Or விருதை வென்றவர்கள், அதனை அவர்கள் விளையாடி வென்ற கிளப்பில் ஒப்படைப்பார்கள். அல்லது மாற்றாக, அதனை அவர்களின் சொந்த கோப்பை சேகரிப்பிலோ அருங்காட்சியகத்திலோ வைப்பார்கள்.
ஆனால் ரொனால்டோ 2013 வென்ற Ballon d'Or கோப்பையை தொண்டு நிறுவனத்திற்கு வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
600,000 யூரோக்களுக்கு கோப்பை விற்பனை
இந்த Ballon d'Or கோப்பை லண்டனில் ஏலம் விடப்பட்டுள்ளது.
இதனை இஸ்ரேலின் மிகப் பெரிய கோடீஸ்வரரான ஐடான் ஓபர் ஏலத்தை வென்று 600,000 யூரோக்களுக்கு கோப்பையை வாங்கிக்கொண்டுள்ளார்.
ரொனால்டோ கடைசியாக 2017-ல் பாலன் டி'ஓர் விருதை வென்றார்.
ஆர்ஜென்டினா ஜாம்பவான் லியோனல் மெஸ்சி 7 பாலன் டி'ஓர் விருதை இதுவரை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 16 மணி நேரம் முன்

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

கணவன் உடலை டிரம்மில் வைத்து அடைத்த நிலையில்.., மணமக்களுக்கு பிளாஸ்டிக் டிரம் பரிசளித்த நண்பர்கள் News Lankasri

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam
