பெலியத்த ஐவர் படுகொலை: பிரதான சூத்திரதாரி தொடர்பில் வெளியான தகவல்
பெலியத்தையில் ஐந்து பேர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் பயணித்த ஜீப் வண்டி, பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரிடம் இருந்து கண்டி பிரதேசத்தில் 24 இலட்சம் ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் குறித்த நபர் ஏற்கனவே நாட்டை விட்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களில் ஒருவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 22 ஆம் திகதி பெலியத்த பகுதியில் வைத்து ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா எனப்படும் உட்பட ஐவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர்.
திட்டமிட்ட கொலை
பெலியத்த பகுதியில் ஐவர் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒரு சில ஊடகங்களில் பொய்யான தகவல்கள் வெளியிடப்பட்டு வருவதாகவும், இதனால் விசாரணைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி 22ஆம் திகதி தெற்கு அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் பெலியத்த பகுதியில் ‘அபே ஜனபல’ கட்சித் தலைவர் சமன் பெரேரா உள்ளிட்ட 5 பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான பிரதான சூத்திரதாரியாகவும், துப்பாக்கிச் சூடு நடத்திய நபராகவும் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் செயற்பட்டதாக சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஆயினும் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளின் அடிப்படையில், இலங்கையில் இருந்து இந்த கொலையை முழுமையாக திட்டமிட்டு செய்தவர் அல்லது சூத்திரதாரியாக செயற்பட்டவர் யார் என்பது உறுதி செய்யப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |