வவுனியா மாவட்ட காணி மற்றும் அபிவிருத்தி மேலதிக அரசாங்க அதிபராக பாலசிங்கம் தேவரதன் கடமையேற்பு!
வவுனியா மாவட்ட செயலகத்தின் காணி மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்கான புதிய மேலதிக அரசாங்க அதிபராக (Additional Government Agent – Land & Development) பாலசிங்கம் தேவரதன், இன்று (20.07.2026) உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதற்கு முன்னர், கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளராக (Deputy Commissioner) நீண்டகாலம் பணியாற்றிய அவர், அப்பகுதியின் விவசாய மற்றும் அபிவிருத்தித் திட்டங்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார்.
மேலதிக அரசாங்க அதிபர்
அவரது பணிக்காலத்தில், கிளிநொச்சி மாவட்டத்தில் பந்தன் மற்றும் கண்டாவளை ஆகிய பகுதிகளில் புதிய கமநல சேவை நிலையங்களை அமைப்பதற்கான முன்மொழிவுகளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் முன்வைத்து, அதற்கான அனுமதிகளைப் பெற்று இரு கமநல சேவை நிலையங்களையும் உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

மேலும், கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கீழ் நீண்டகாலமாக புதுப்பிக்கப்படாமல் இருந்த நெற்காணி பதிவேட்டை (Paddy Land Register – PLR) முழுமையாகப் பூர்த்தி செய்த சாதனையும் அவருடைய பணிக்காலத்தின் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற எளிய கடமையேற்பு நிகழ்வில், மாவட்ட செயலகத்தின் உயர் அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டு, புதிய மேலதிக அரசாங்க அதிபருக்கு தங்களது வாழ்த்துகளையும் வரவேற்பையும் தெரிவித்தனர்.