பிள்ளைகளின் கண் முன்னே தாய் எடுத்த விபரீத முடிவு! விரைந்து செயற்பட்ட இளைஞன்
பலாங்கொடை பகுதியில் தாயொருவர் பிள்ளைகளின் கண் முன்னே தவறான முடிவெடுத்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் பெந்தர பாலத்தின் கரையோரப்பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.
கணவன், மனைவிக்கிடையில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக 18 மாத மகளையும், ஒன்பது வயது மகனையும் பாலத்தில் விட்டுவிட்டு பெந்தர ஆற்றில் சுமார் 40 அடி உயரத்திலிருந்து தாயொருவர் பாய்ந்துள்ளார்.
வெளியான காரணம்
குறித்த பெண் நீரில் தத்தளித்துக்கொண்டிருந்த போது, அருகில் நீர் விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்த இளைஞரொருவர் விரைவாக செயற்பட்டு காப்பாற்றியுள்ளார்.
பலாங்கொடை பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண், எல்பிட்டிய, உரகஸ்மன்ஹந்தி பிரதேசத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துள்ள நிலையில், இருவருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள தகராறு இதற்கான காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 6 நாட்கள் முன்

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri
