உணவு மற்றும் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்
பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை குறைக்கப்பட வேண்டும் என நுகர்வோர் உரிமைகளை பாதுகாப்பதற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.
நடைமுறையில் உள்ள மின் கட்டண குறைப்புக்கு ஏற்ப இவ்வாறு பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையும் குறைக்கப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிற்றுண்டிச் சாலை உணவுகளின் விலைகள் குறைக்கப்பட வேண்டும்
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
எரிவாயு விலைகள் குறைக்கப்படும் போது பேக்கரி உரிமையாளர்கள் மற்றும் உரிமையாளர் சங்கங்கள் தமது வெதுப்பகங்கள் மின்சாரத்தின் மூலம் இயங்குவதாக கூறுகின்றனர்.
அதன் காரணமாக பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்க முடியாது என அந்த சந்தர்ப்பங்களில் தெரிவித்தனர். இருப்பினும் தற்போது அதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.
மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ள நிலையில் பேக்கரி உற்பத்திகள் மற்றும் சிற்றுண்டிச் சாலை உணவுகளின் விலைகள் குறைக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

பிரித்தானியாவின் பிரபலமான ஐஸ்கிரீம் வியாபாரிக்கு 8 முறை கத்திக்குத்து: இரண்டு பேர் கைது! News Lankasri
