பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம்
இலங்கையில் தொற்றுநோய் காரணமாக மக்கள் எதிர்கொள்ளும் சிரமத்தை கருத்தில் கொண்டு, பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை அதிகரிப்பதில்லை என வெளி மாகாண வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
நிகவெரட்டியவில் நேற்று ஊடகங்களுக்கு உரையாற்றிய சங்கத்தின் அழைப்பாளர் காமினி கந்தேகெதர இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
வெதுப்பக பொருட்களின் விலையை இன்று முதல் அதிகரிக்க அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் ஏற்கனவே முடிவு செய்திருந்தது.
அதன்படி, பாணின் விலையை 5 ரூபாவாலும், ஏனைய பொருட்களின் விலை 10 ரூபாவாலும், 1 கிலோகிராம் கேக்கின் விலை 100 ரூபாவாலும் அதிகரிக்கப்படவிருந்தன.
எனினும் பொது மக்கள் கடுமையான கஷ்டங்களை எதிர்கொள்ளும் இந்த நேரத்தில் வெதுப்பக பொருட்களின் விலையை அதிகரிப்பதைத் தவிர்க்குமாறு அனைத்து வெதுப்பக உரிமையாளர்களையும் வெளிமாகாண வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் அழைப்பாளர் கோரியுள்ளார்.
மூலப்பொருட்களின் விலை உயர்வால், வெதுப்பக பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டியது அவசியம், ஆனால் இது அவ்வாறு செய்ய ஏற்ற நேரம் அல்ல என்று சங்கம் கருதுகிறது என்று சங்கத்தின் அழைப்பாளர் காமினி கந்தேகெதர குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
நாட்டில் இன்றைய தினம் முதல் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளன.
இதன்படி 10 ரூபாவால் குறித்த உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, ஒரு கிலோகிராம் கேக்கின் விலையை 100 ரூபாவால் அதிகரிப்பதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இந்த விலை அதிகரிப்பானது இன்றைய தினம் முதல் அமுலுக்கு வரும் என சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயரட்ன ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

குணசேகரன் தலைமையிலேயே பார்கவி-தர்ஷன் திருமணத்தை நடத்தும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தெறி எபிசோட் புரொமோ Cineulagam
