மணிக்கு 35 முறை வரை சுவாசிப்பதில் சிரமம்..! மன்றில் சஷீந்திர ராஜபக்ச
தடுப்புக் காவலில் உள்ள முன்னாள் அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச, மணிக்கு 35 முறை வரை சுவாசிப்பதில் சிரமப்படுவதாகவும் இதனால் அவருக்கு பிணை வழங்குமாறும் அவரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தில் இன்றையதினம்(12.09.2025) முன்னிலையான போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சஷீந்திர ராஜபக்ச, உறங்கும் போது, மணிக்கு 35 முறை வரை சுவாசிப்பதில் சிரமப்படுவதாகவும், சிறையில் கிடைக்காத சிறப்பு மருத்துவ உபகரணங்கள் தேவைப்படுவதாகவும் அவரது வழக்கறிஞர் அனுஜா பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
விளக்கமறியல்
சஷீந்திர ராஜபக்சவின் உடல்நிலை மோசமடைந்து உயர் இரத்த அழுத்தத்திற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் அவர் வாதிட்டுள்ளார்.
எனினும், அவருக்கு பிணை நிராகரிக்கப்பட்டதோடு அவரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் கைது செய்யப்பட்ட சஷீந்திர ராஜபக்ச, பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
