சஷீந்திர ராஜபக்சவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச பிணையில் செல்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சஷீந்திர ராஜபக்ச ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
நீதிமன்ற உத்தரவு
சந்தேக நபரின் சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனுவை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, இந்த பிணை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சஷீந்திர மீது, அரசு சொத்து சட்டம் மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் “ஊழல்” குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுப்படி, மகாவலி அதிகாரசபைக்கு சொந்தமான காணியில் கட்டப்பட்டிருந்த அவரது அரசியல் அலுவலகம் “அரகலய” போராட்டத்தின் போது தாக்கி அழிக்கப்பட்டபோது, அதற்கான நஷ்டஈடாக 88 லட்சத்து 50 ஆயிரம் ரூபா சட்டவிரோதமாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan
