பிக்குகள் உள்ளிட்ட பதினான்கு பேருக்கு பிணை
போலிக் குற்றச்சாட்டுகளின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மூன்று பிக்குகள் உள்ளிட்ட பதினான்கு பேருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
சந்தேகநபர்கள் மீதான குற்றச்சாட்டு
கடந்த மே 9 ஆம் திகதி நாடு முழுவதும் நடைபெற்ற பதற்ற நிலையின் போது பல முக்கிய அரசியல் பிரமுகர்களின் சொத்துக்கள் பொதுமக்களால் சேதப்படுத்தப்பட்டிருந்தன.
இதன்போது, ராஜபக்ஷ பரம்பரையின் பூர்வீக வீடு மற்றும் ராஜபக்ஷ சகோதரர்களின் பெற்றோருடைய நினைவுச் சின்னம் என்பன பொதுமக்களால் சேதப்படுத்தப்பட்டிருந்தன.

பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாடு
குறித்த சம்பவம் தொடர்பில் ராஜபக்ஷ தரப்பு கொடுத்திருந்த முறைப்பாட்டிற்கமைய, ராஜபக்ஷ குடும்பம் மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டிருந்த வேகந்தவல ராஹுல தேரர், வனாத்தமுல்லே உதித தேரர், தேவாலேகம பிரேமரத்ன தேரர் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் பதினான்கு பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இன்றைய தினம்(31) வலஸ்முல்லை நீதிமன்றத்தில் அவர்களுக்கு எதிரான வழக்கு நடைபெற்ற போது சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
பராசக்திக்கு வெளிநாட்டில் குவியும் வசூல்.. எவ்வளவு தெரியுமா? அமரன் படத்தை விட அதிகம் தான் Cineulagam