அக்கரைப்பற்றில் பெண் சட்டத்தரணி உட்பட இருவருக்கு பிணையில் செல்ல அனுமதி
அக்கரைப்பற்றில் சீவிய நல உரித்து ஒன்றை கிரயமாக மாற்றி விற்பதற்கு உறுதி எழுதியதன் சந்தேகத்தின் பேரில் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவர் உட்பட இருவருக்கு சரீரப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட இருவரும் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் இன்று (4) சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் சம்மதத்துடன் சீவிய நல உரித்தின் ஆதனம் ஒன்றை கிரயமாக எழுதி விற்க சட்டத்தரணி ஒருவர் உறுதி எழுதி வழங்கியுள்ளார்.
கைது நடவடிக்கை
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரிடம் முறையிட்டதையடுத்து ஒருவர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வந்த மாவட்ட குற்ற விசாரணைப் பொலிஸார் இந்த உறுதியை எழுதிய பெண் சட்டத்தரணி ஒருவர் மற்றும் இதற்கு சாட்சி கையெழுத்திட்ட ஆண் ஒருவர் உட்பட இருவரை சந்தேகத்தின் அடிப்படையில் இன்று (4) கைது செய்துள்ளனர்.
மேலும், இதில் கைது செய்யப்பட்டவர்களை இன்று அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்திய போது அவர்களை பிணையில் விடுவிக்க மன்று அனுமதித்துள்ளது.
அத்துடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சவுதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 4000 பிச்சைக்காரர்கள்: கவலையில் பாகிஸ்தான்! News Lankasri

கைவிடப்பட்ட குழந்தையை மீட்ட இளம்பெண்: பிரபல நடிகையின் சகோதரி குஷ்பூவுக்கு குவியும் பாராட்டுகள் News Lankasri

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri
