இம்ரான் கானுக்கு பிணை : சிறையில் இருந்து வெளியேற வாய்ப்பில்லை
காணி குத்தகை நிறுவன அதிபர் ஒருவரிடம் இருந்து பல பில்லியன் ரூபாய் மதிப்புள்ள நிலத்தை இலஞ்சமாகப் பெற்றதாக, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மற்றும் அவரது மனைவி மீது குற்றம் சாட்டப்பட்ட 190 மில்லியன் பவுண்டுகள் ஊழல் வழக்கில் இம்ரான் கானுக்கு பிணை(Imran Khan) வழங்கப்பட்டுள்ளது.
குறித்த தீர்ப்பை இன்று(15.05.2024) பாகிஸ்தானின் மேல் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
இரகசிய இராஜதந்திர தொடர்பு
இந்த வழக்கு தொடர்பான வாதங்கள் நிறைவடைந்ததையடுத்து இஸ்லாமாபாத் மேல் நீதிமன்றத்தின் இரு உறுப்பினர் அமர்வு நேற்று தீர்ப்பை ஒத்திவைத்தது.
இந்தநிலையில் இன்று பிணையை பெறுவதற்காக கானிடம் 1 மில்லியன் பிணைப் பணப் பத்திரத்தை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
எவ்வாறாயினும், இத்தாத் மற்றும் சைபர் வழக்குகளில் அவரது தண்டனை இன்னும் நீடிப்பதால்,அவர் அடியாலா சிறையில் விடுவிக்கப்பட வாய்ப்புகள் இல்லை.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ராவல்பிண்டியில் உள்ள உயர் பாதுகாப்பு அடியாலா சிறையில் இம்ரான் கான் அடைக்கப்பட்டுள்ளார்.
2022 ஏப்ரலில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் அவர் அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டதிலிருந்து, மறைக்குறியீடு என்ற இரகசிய இராஜதந்திர தொடர்பு வழக்கு உட்பட குறைந்தது நான்கு வழக்குகளில் இம்ரான் கான் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam
