நடிகை தமிதா வழக்கு விவகாரம் : நீதிமன்ற உத்தரவு
நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை தமிதா அபேரத்ன (Tamita Aberathne) மற்றும் அவரது கணவரை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
குறித்த தீர்ப்பானது, இன்றைய தினம் (24.04.2024) கோட்டை (Kotte) நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை
கடந்த 5ஆம் திகதி நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் ஆகியோர் நபர் ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி 5 மில்லியன் ரூபா பண மோசடியில் ஈடுபட்டதன் குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
இதனை தொடர்ந்து, அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதற்கமைய, மேற்கொள்ளப்பட்ட வழக்கு விசாரணைகளின் பின்னர் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிர்பார்த்த சம்பளம் கிடைக்குமா...! மீண்டும் கூடவிருக்கும் நிர்ணய சபை
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ரொனால்டோவுக்கு அதிர்ச்சி கொடுத்த டிஆர் காங்கோ: ஃபிபா உலகக்கிண்ணத்தில் ரசிகர்கள் ஏமாற்றம் News Lankasri
இந்தியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் துணையாக இருப்பேன்..ஆனால் மோடி இருந்தால்தான் - ட்ரம்ப் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri