ஹோர்முஸில் அதிகரிக்கும் உச்சகட்ட பதற்றம்.. சர்வதேச போர்க்களத்தில் ஈரானுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
உலகளாவிய எண்ணெய் விநியோகத்தின் முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் (Hormuz) நீரிணையை பாதுகாக்க இராணுவ பலத்தைப் பயன்படுத்த அனுமதிக்குமாறு ஐநா பாதுகாப்பு சபையில் பஹ்ரைன் வரைவுத் தீர்மானம் ஒன்றை முன்மொழிந்துள்ளது.
சர்வதேச வர்த்தகக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக, ஹோர்முஸ் நீரிணை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாடுகள் தன்னிச்சையாகவோ அல்லது கூட்டுப் படைகளாகவோ இணைந்து இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்க இந்தத் தீர்மானம் வழிவகுக்கிறது.
ஐநா சாசனத்தின் 7ஆவது அத்தியாயத்தின் கீழ் (Chapter Seven) இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது பொருளாதாரத் தடைகள் முதல் நேரடி இராணுவத் தாக்குதல் வரை அனுமதி வழங்கக்கூடிய வலிமைமிக்க சட்டப்பிரிவாகும்.
ஈரானுக்கு Check..
இந்தத் தீர்மானத்திற்கு அமெரிக்கா மற்றும் பிற வளைகுடா நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

ஈரானின் அச்சுறுத்தலால் உலக எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஈரானின் இத்தகைய செயல்கள் சர்வதேச அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் என அந்த வரைவு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில்,
- ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்களுக்கு எதிராக ஈரான் முன்னெடுக்கும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும்.
- சர்வதேச கடல் வழிப் போக்குவரத்தைத் தடுக்கும் முயற்சிகளை முறியடிக்க உறுப்பு நாடுகளுக்கு அதிகாரம் வழங்குதல்.
- ஈரானுக்கு எதிராகக் குறிவைக்கப்பட்ட தடைகளை (Targeted Sanctions) விதிப்பதற்கான தயார் நிலை. என்பவை பிரதானமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
களமிறங்கும் அமெரிக்க கடற்படை
இருப்பினும், இந்தத் தீர்மானம் ஐநா பாதுகாப்பு சபையில் நிறைவேற்றப்படுவது கடினம் என இராஜதந்திரிகள் கருதுகின்றனர்.

ஈரானின் நட்பு நாடுகளான ரஷ்யா மற்றும் சீனா இந்தத் தீர்மானத்தைத் தனது 'வீட்டோ' (Veto) அதிகாரத்தைப் பயன்படுத்தித் தடுத்து நிறுத்த அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
ஒரு தீர்மானம் நிறைவேற 15 உறுப்பினர்களில் குறைந்தது 9 நாடுகளின் ஆதரவு தேவை என்பதோடு, 5 நிரந்தர உறுப்பு நாடுகளும் எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தீர்மானம் ஒருபுறமிருக்க, அமெரிக்கா தனது இராணுவ பலத்தை மத்திய கிழக்கில் அதிகரித்து வருகிறது.
சுமார் 2,500 கடற்படை வீரர்கள் (Marines), USS Boxer என்ற பிரம்மாண்ட போர் கப்பல் மற்றும் ஏனைய போர்க்கப்பல்கள் அந்தப் பிராந்தியத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானின் கடற்கரை பகுதிகள் அல்லது முக்கியமான எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவு (Kharg Island) மீது தாக்குதல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டாலும், ஈரானுக்குள் தரைவழிப் படைகளை அனுப்புவது குறித்து இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam