ஈரானின் தொடர்ச்சியான தாக்குதல்கள்! பஹ்ரைனின் அதிரடி தடை
ஈரானின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு மத்தியில், வளைகுடா நாட்டின் கடற்கரைகளைப் பாதுகாக்கும் பொருட்டு, "மறு அறிவிப்பு வரும் வரை" கடல்வழித் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பஹ்ரைன் அறிவித்துள்ளது.
மீன்பிடி மற்றும் பொழுதுபோக்குக் கப்பல்களைப் பயன்படுத்தும் மாலுமிகளுக்கு இந்தத் தடை பொருந்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க தாக்குதலில் 165 சிறுமிகள் பலியான கோர சம்பவம்! இந்த 2 பேரையும் நினைவில் கொள்ளுங்கள் - குற்றவாளிகளை அறிவித்த ஈரான்
புதிய நடவடிக்கைகள்
இது உள்ளூர் நேரப்படி தினமும் மாலை 6 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் இன்று(30) தெரிவித்துள்ளார்.

"வெளிப்படையான ஈரானிய ஆக்கிரமிப்பு" மற்றும் அது குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பிற்கு ஏற்படுத்தும் "கடுமையான அபாயங்கள்" காரணமாக இந்த புதிய நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படுவதாக அமைச்சகம் குறிப்பிடப்பட்டுள்ளது.
"அனைத்து மாலுமிகளும் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், சட்டரீதியான பொறுப்புக்கூறலைத் தவிர்ப்பதற்கும், கடல்வழித் தடையின் நேரங்களைக் கடைப்பிடித்து, கடற்கரைகளை நெருங்குவதைத் தவிர்க்க வேண்டும்" என்றும் அது வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 11 மணி நேரம் முன்
ஈரான் தாக்குதலில் நொறுங்கிப் போன அமெரிக்க போர் விமானங்கள்: வெளியானப் புகைப்படங்களால் அதிர்ச்சி News Lankasri