துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயம்
பதுளை குற்றப்புலனாய்வு பிரிவினரால் கஹட்டரூப்ப பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தென்னேஹேன, பொத்துபிட்டிய பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
சட்டவிரோதமாக பயிரிடப்பட்ட கஞ்சா தோட்டமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
இதன்போது 28 வயதான சந்தேகநபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.



