கோ கோட்டா ஹோம்! பதுளை- நுவரெலிய,இரத்தினபுரி மக்களின் குரல்களும் இணைந்தன (photos)
அரசாங்கத்துக்கு எதிராக இன்றையதினம் பதுளை- பசறை நகரில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
பதுளை மாவட்டத்தின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தோட்டத் தொழிலாளர்களும் முழுமையாக இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு ஒன்றிணைந்து அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் '
இந்தநிலையில் பசறை நகரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்றுகூடி கோட்டா கோஹோம் என்ற கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
வர்த்தக நிலையங்கள் முழுமையாக மூடப்பட்டு போக்குவரத்துக்களும் ஸ்தம்பித்திருந்தன.
இரத்தினபுரியில் ஆசிரியர்கள் ஏற்பாடு செய்த போராட்டத்தில் பலர் பங்கேற்றனர்
இதேவேளை நுவரெலியாவிலும் இன்று அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
நுவரெலியா நகரில் உள்ள பிரதான அஞ்சல் நிலையத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது
போராட்டத்தில் நுவரெலியா வர்த்தக நிலையத்தில் தொழில் புரிவோர் , மாநகர சபை ஊழியர்கள் , பொது மாவட்ட வைத்தியசாலை ஊழியர்கள், சாரதிகள் , அதிபர் ஆசிரியர்கள் ,அஞ்சல்; நிலைய ஊழியர்கள் என பலர் பங்கேற்றிருந்தனர்.







