எல்ல வீதியின் ஆபத்தான வளைவில் மண் அணை நிர்மாணம்
பதுளை - எல்ல வீதியின் ஆபத்தான வளைவில் மண் அணையொன்று நிர்மாணிக்கப்பட்டு பாதுகாப்பு அரண் உருவாக்கப்பட்டுள்ளது.
எல்ல வீதியில் ஐந்தாம் மைல் போஸ்ட் அருகே உள்ள ஆபத்தான வளைவில் கடந்த 04ம் திகதி இடம்பெற்ற பேருந்து விபத்தில் தற்போதைக்கு 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
அனர்த்தம் ஏற்படுவதைத் தடுக்க முடியும்
இன்னும் பலர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதற்கு முன்னரும் குறித்த ஆபத்தான வளைவில் பல்வேறு விபத்துக்கள், அனர்த்தங்கள் இடம்பெற்றிருந்தன.

அதனைக் கருத்திற் கொண்டு குறித்த ஆபத்தான வளைவில் இனிவரும் காலங்களில் விபத்துக்கள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் தற்போது மண் நிரப்பி அணையொன்று நிர்மாணிக்கப்பட்டு பாதுகாப்பு அரண் உருவாக்கப்பட்டுள்ளது.
அதன் மூலம் குறித்த ஆபத்தான வளைவில் ஏற்படும் விபத்துக்களின் போது வாகனங்கள் பாதாள சரிவில் வீழ்ந்து அனர்த்தம் ஏற்படுவதைத் தடுக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam