இலங்கையை உலுக்கிய கோர விபத்துக்கள்! அதிர்ச்சியளிக்கும் சாரதிகளின் செயல்
சாரதியின் கவனயீனமே பதுளை – தெமோதரை பேருந்து விபத்திற்கான காரணம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த அரை சொகுசு தனியார் பேருந்து ஒன்று நேற்று(15.07.2023) தெமோதர நீர் வழங்கல் சபைக்கு அருகில் வீதியை விட்டு விலகி வீடொன்றுக்கு அருகில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்தின் போது பேருந்தில் 25 பேர் பணித்ததுடன் அதில்,15 பேர் காயமடைந்து பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
பயணிகளின் அனுபவம்
குறித்த பேருந்து விபத்தில் சிக்கிய பேருந்து நடத்துனர் கூறுகையில், "பேருந்தில் டிக்கெட் கொடுத்து கொண்டிருந்தேன். அப்போது பேருந்து திடீரென பாதையில் இருந்து விலகி கீழே விழுந்தது.
எனக்கும் பேருந்து கவிழ்ந்த பிறகுதான் தெரிந்தது. சிறிது நேரத்தில் நானும் உள்ளிருந்து வெளியே வந்தேன்."என நடத்துனர் கூறியுள்ளார்.
விபத்தை எதிர்கொண்ட பயணி ஒருவர் கூறுகையில்,“பேருந்து சத்தமாக வந்தது. நான் கொழும்புக்கு போயிருந்தேன். தொலைபேசியில் பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.
பேருந்து பிரேக் அடிக்கவில்லை. ஆனால் திடீரென கவிழ்ந்தது. எனக்கு முன்னால் ஒரு பாட்டி அமர்ந்திருந்தார். நானும் பாட்டியும் வெளியே வந்தோம்."என கூறியுள்ளார்.
இதேவேளை பாதையில் தலைகீழாக கவிழ்ந்த பேருந்து மிகுந்த முயற்சியால் மீட்கப்பட்டது.
மேலும் அதிவேகமாக சென்ற பேருந்தை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமையே விபத்துக்கான காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாரதிகளின் கவனயீனம்
இதேபோன்று சாரதியின் கவனயீனம் காரணமாக பொலனறுவைக்கு அருகில் இடம்பெற்ற கோர விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய 2023 ஆம் ஆண்டில் இதுவரை 137 பேருந்து விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, இவ்வருடத்தின் ஜூலை 10ஆம் திகதி வரை 1,135 வாகன விபத்துக்களில் 1,202 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தவிர, 2,088 விபத்துக்களில் கடுமையான காயங்களும், 4,450 சிறிய காயங்களுடன் விபத்துகளும் ஏற்பட்டுள்ளதாக நிஹால் தல்துவ மேலும் தெரிவித்துள்ளார்.
You may like this video
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |