பதுளையில் நேர்ந்த சோகம்! இரு பாடசாலை மாணவர்கள் பரிதாபமாக பலி (Video)
பதுளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 9 பேர் காயங்களுடன் பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரு பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நேற்றும் இன்றும் பதுளை கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இந்தப் போட்டிக்கு ஆதரவு தெரிவிக்க வந்த வாகனத் தொடரணியில் கப் ரக வாகனம் ஒன்று பதுளை கழிவுகள் சேகரிக்கப்படும் இடத்துக்கு அருகாமையில் உள்ள புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மைதானத்தில் விபத்துக்குள்ளானது.
இதன்போது 11 பேர் காயமடைந்த நிலையில் பதுளை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி 19 வயதுடைய இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஏனைய 9 பேரும் பதுளை வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களுள் இருவர் கவலைக்கிடமாக உள்ளனர் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி ராகேஷ்
முதலாம் இணைப்பு
பதுளையில் உள்ள முன்னணிப் பாடசாலையொன்றில் கல்வி பயிலும் இரு மாணவர்கள் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
பதுளை கிரிக்கெட் மைதானத்திற்கு அருகில் உள்ள புதிய மைதானத்தில் இன்று (01) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மேலும் எட்டு மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
பாடசாலை கிரிக்கெட் போட்டியின் (Big Match) போது, இடம்பெற்ற வாகன அணிவகுப்பில் ஏற்பட்ட விபத்திலே மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.




உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 19 மணி நேரம் முன்

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam
