இஸ்ரேலுடன் உக்கிரமடையும் யுத்தம்: இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஈரானிய ஜனாதிபதி

Badulla Sri Lanka
By Harrish Apr 15, 2024 04:12 PM GMT
Report

பதுளையின் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை திறந்து வைப்பதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் என நீர்ப்பாசன மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ச(Sachindra Rajapaksa) கூறியுள்ளார்.

மேலும், பதுளையின் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம்(Uma Oya Hydro Power Project) எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக திட்டப் பணிப்பாளர் பொறியியலாளர் டி.சி.எஸ். எலகந்த(T.C.S. Eleganta) தெரிவித்துள்ளார்.

வாடிக்கையாளர்களுக்கு மக்கள் வங்கி வழங்கியுள்ள அவசர அறிவுறுத்தல்

வாடிக்கையாளர்களுக்கு மக்கள் வங்கி வழங்கியுள்ள அவசர அறிவுறுத்தல்


உமா ஓயா பல்நோக்கு திட்டம்

2011ஆம் ஆண்டில், உமா ஓயா பல்நோக்கு திட்டம்¸ஈரானின் ஏற்றுமதி மேம்பாட்டு வங்கியின் கடனுதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், புவிசார் அரசியல் தடைகள் ஈரானில் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியதால், திட்டத்தின் நிதி உள்நாட்டு திறைசேரி ஒதுக்கீடுகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் 120 மெகாவாட் மின்சாரத் திறனை தேசிய மின் கட்டத்திற்கு பங்களிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இஸ்ரேலுடன் உக்கிரமடையும் யுத்தம்: இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஈரானிய ஜனாதிபதி | Badula Uma Oya Multipurpose Development Project

அத்துடன் மின்சார உற்பத்திக்கு அப்பால், உமா ஓயா திட்டம், விவசாயம் மற்றும் குடிநீர் விநியோகத்தில் முக்கியமான தேவைகளை நிவர்த்தி செய்யவுள்ளது.

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், புஹல்பொல நீர்த்தேக்கத்திலிருந்து சேகரிக்கப்படும் நீர், 4 கிலோமீற்றர் சுரங்கப்பாதையின் ஊடாக, டயரபா நீர்த்தேக்கத்திற்குச் செல்கிறது.

அங்கிருந்து 15.5 கி.மீ சுரங்கப்பாதை மூலம் எல்ல கரந்தகொல்ல பகுதியில் உள்ள இரண்டு நிலத்தடி விசையாழிகளுக்கு தண்ணீர் செல்கிறது.

இஸ்ரேலுடன் உக்கிரமடையும் யுத்தம்: இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஈரானிய ஜனாதிபதி | Badula Uma Oya Multipurpose Development Project

இந்த விசையாழிகள், ஒவ்வொன்றும் 60 மெகாவாட் உற்பத்தி செய்யும், தேசிய மின் கட்டத்திற்கு பங்களிக்கவுள்ளன.

மின்சார உற்பத்தியைத் தொடர்ந்து,எஞ்சிய நீர் மற்றுமொரு 4 கிலோமீற்றர் சுரங்கப்பாதையின் ஊடாக அலிகொட்டா ஆர நீர்த்தேக்கத்திற்கும், பின்னர் ஹந்தபனகல மற்றும் குடா ஓயா நீர்த்தேக்கங்களுக்கும் அனுப்பப்படவுள்ளன.

இந்தநிலையில் உமா ஓயா திட்டத்தின் மூலம் 15,000 ஏக்கர் நெற்பயிர்களுக்கு பெரும்போக மற்றும் சிறுபோகப் பருவகாலங்களில் நீர் விநியோகம் உறுதி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானுக்கு எச்சரிக்கையுடன் இஸ்ரேலின் திடீர் பல்டி

ஈரானுக்கு எச்சரிக்கையுடன் இஸ்ரேலின் திடீர் பல்டி

ஐ.பி.எல் தொடரில் மீண்டும் வரலாற்றை மாற்றி அமைத்த சன்ரைசர்ஸ்

ஐ.பி.எல் தொடரில் மீண்டும் வரலாற்றை மாற்றி அமைத்த சன்ரைசர்ஸ்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US