ஆபத்தான நபருடன் நெருங்கிய தொடர்பு - வீடொன்றிலிருந்த பெண் கைது
போதைப்பொருள் கடத்தல்காரரான 'படோவிட்ட அசங்க' என்பவரின் போதைப்பொருள் நடவடிக்கைகளை வழிநடத்தியதாக சந்தேகிக்கப்படும் முக்கிய பெண் சந்தேகநபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படைக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக நேற்று (01) தெஹிவளைப் பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீடொன்றிற்கு முன்னால் சோதனை
தெஹிவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்கிஸ்ஸ, அபேசேகர வீதியிலுள்ள வீடொன்றிற்கு முன்னால் இச்சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 62 கிராமும் 600 மில்லிகிராமும் எடையுடைய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில், இவர் நீண்ட காலமாகப் 'படோவிட்ட அசங்க'வின் போதைப்பொருள் விநியோகம் மற்றும் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் தொகையும் மேலதிக விசாரணைகளுக்காகவும் சட்ட நடவடிக்கைகளுக்காகவும் தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri
November 2026 Tarot Predictions: நவம்பர் மாதம் உங்களுக்கு என்ன மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது? Manithan