திருகோணமலையில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள்: பலர் இடம்பெயர்வு
திருகோணமலை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக நேற்று (27) பிற்பகல் 05.00 மணிக்கு பெறப்பட்ட புள்ளி விபரத்தகவலின் படி 2942 குடும்பங்களைச் சேர்ந்த 8752 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் 131 குடும்பங்களைச் சேர்ந்த 329 பேர் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 882 குடும்பங்களைச் சேர்ந்த 3173 பேர் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.
மேலும், 24 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் குகதாஸ் சுகுணதாஸ் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டோர்
சேருவில பிரதேச செயலகப்பிரிவில் 78 குடும்பங்களைச் சேர்ந்த 201 பேரும், மூதூர் பிரதேச செயலகத்தில் 1229 குடும்பங்களைச் சேர்ந்த 3452 பேரும், தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் 298 குடும்பங்களைச் சேர்ந்த 939 பேரும் மற்றும் மொறவெவ பிரதேச செயலகப் பிரிவில் 39 குடும்பங்களைச் சேர்ந்த 120 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவில் 434 குடும்பங்களைச் சேர்ந்த 1698 பேரும், கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் 709 குடும்பத்தைச் சேர்ந்த 1852 பேரும், குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் 81 குடும்பத்தைச் சேர்ந்த 207 பேரும், கந்தளாய் பிரதேச செயலகப் பிரிவில் 60 குடும்பத்தைச் சேர்ந்த 238 பேரும், வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் 13 குடும்பத்தைச் சேர்ந்த 40 பேரும், பதவிஸ்ரீபுர பிரதேச செயலகப் பிரிவில் 01 குடும்பத்தைச் சேர்ந்த 05 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சேருவில பிரதேச செயலகப் பிரிவில் பாதிக்கப்பட்டுள்ள 12 குடும்பங்களைச் சேர்ந்த 40 பேர் சண்பகவல்லி வித்தியாலயத்திலும், தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் பாதிக்கப்பட்டுள்ள 20 குடும்பங்களைச் சேர்ந்த 68 பேர் சித்திவிநாயகர் வித்தியாலயத்திலும், பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவில் பாதிக்கப்பட்டுள்ள 40 குடும்பங்களைச் சேர்ந்த 82 பேர் பாரதிபுரம் பாடசாலையிலும் முத்துநகர் கிராம அபிவிருத்திச் சங்க கட்டடத்திலும், குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் பாதிக்கப்பட்டுள்ள 59 குடும்பங்களைச் சேர்ந்த 139 பேர் மொஹைதீன் ஜும்மா பள்ளிவாசலிலும் தங்க வைக்கப்பட்டு தேவையான வசதிகளை அமைத்து கொடுத்து வருவதாகவும் மேலும் தெரிவித்தார்.
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri